/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் ஹிந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம்; பெண்கள் உட்பட 150 பேர் கைது

ADDED : டிச 04, 2024 09:53 PM

ஊட்டி; வங்க தேசத்தில் ஹிந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து, ஊட்டியில் ஹிந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வங்கதேசத்தில் சில மாதங்களுக்கு முன்பு இட ஒதுக்கீடு சம்பந்தமாக மாணவர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக உருவெடுத்தது. போராட்டம் அங்குள்ள சிறுபான்மை ஹிந்துக்களை பாதிப்புக்கு உள்ளாக்கியது. வங்கதேசத்தில், ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடக்கும் சம்பவத்திற்கு ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, ஊட்டி ஏ.டி.சி., பகுதியில், ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடக்கும் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. பா.ஜ.,மாவட்ட தலைவர் மோகன்ராஜ், ஆர்.எஸ்.எஸ்., கோவை கோட்ட பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் வேலுச்சாமி முன்னிலையில், பல ஹிந்து அமைப்புகள் பங்கேற்றன. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்காததால்,150 பேர் கைது செய்யப்பட்டனர்.