ADDED : பிப் 27, 2026 05:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி: கோத்தகிரி தாலுகா அலுவலக நுழைவு வாயிலில் குழி ஏற்பட்டுள்ளதால், வாகனங்கள் சென்று வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கோத்தகிரி தாலுகா அலுவலகத்திற்கு நாள்தோறும் நுாற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். வளாகத்தின் தரை தளத்தில் நீதிமன்றம் இயங்குகிறது. வருவாய் மற்றும் நீதிமன்றம் தேவைகளுக்காக, வரும் பொது மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
தவிர, அலுவலர்களின் வருகையும் இருந்து வருகிறது. நுழைவு வாயிலில் பெரிய குழி ஏற்பட்டுள்ளதால், வாகனங்கள் சென்று வருவதில் இடையூறாக உள்ளது. மேலும், நடந்து செல்லும் பொதுமக்கள் குழியில் தடுக்கி விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே, மக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதியில் உள்ள குழியை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

