/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
/
நீலகிரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
ADDED : ஆக 04, 2025 11:55 PM

ஊட்டி; நீலகிரி மாவட்டத்துக்கு, 'ரெட் அலர்ட்' அறிவிக்கப்பட்டதால், இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது; சுற்றுலா தலங்களும் மூடப்படுகிறது.
'நீலகிரி மாவட்டத்தில் இன்று (5ம் தேதி) கன மழை பெய்ய கூடும்,' என, வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' அறிவித்துள்ளது.
மண்சரிவு, மரங்கள் சாலைகளில் விழுந்து பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், பள்ளி மாணவர்களின் நலன் கருதி. மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது.
சுற்றுலா பயணிகளின் நலன் கருதி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்படுகிறது.
மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில்,''மழை பாதிப்பு ஏற்பட்டால், அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண்: 1077 மற்றும் 0423--2450034; 2450035 ஆகிய எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்,'' என்றார்.