sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 பணி பாதுகாப்பு கேட்டு கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்

/

 பணி பாதுகாப்பு கேட்டு கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்

 பணி பாதுகாப்பு கேட்டு கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்

 பணி பாதுகாப்பு கேட்டு கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்


ADDED : பிப் 07, 2026 06:19 AM

Google News

ADDED : பிப் 07, 2026 06:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: ஊட்டி, கூடலுார் அரசு கல்லுாரிகளில், கவுரவ விரிவுரையாளர்கள், ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊட்டியில் நடந்த போராட்டத்துக்கு கவுரவ விரிவுரையாளர்கள் நல சங்க ஊட்டி கிளை தலைவர் சேவியர் இன்னாசிமுத்து தலைமை வகித்தார்.

சங்க மாநில தலைவர் செந்தில்குமார் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகையில்,''யுஜிசி கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாத சம்பளமாக, 57 ஆயிரத்து, 800 ரூபாய் வழங்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. அனைத்து அரசு கல்லூரி விரிவுரையாளர்களுக்கு, பி.எப்., மற்றும் இ.பி.எப்., பிடித்தம் செய்வதுடன், மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்.

ஓய்வு பெற்ற கவுரவ விரிவுரையாளகளுக்கு, 25 லட்சம் ரூபாய் பணிக்கொடை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம். சாத்தியம் உள்ள கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, வரும் 9ம் தேதி முதல் காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்,'' என்றார்.

* கூடலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த போராட்டத்துக்கு சங்க தலைவர் கிஷோர் தலைமை வகித்தார். போராட்டத்தில், 'ஆண்டு, 11 மாதம் ஊதியம் வழங்கும் முறையை மாற்றி, 12 மாதம் ஊதியம் வழங்க வேண்டும்; இக்கல்லுாரியில், அலுவலக பணியாளர்களுக்கு நிலுவையில் ஆறு மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும்,' என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்தில், செயலாளர் விஜய சாருமதி, துணைச் செயலாளர் பொட்கோ மற்றும் விரிவுரையாளர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us