ADDED : நவ 27, 2024 09:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி; ஊட்டி ஆஸ்பிடல் சாலையில் சுற்றித் திரியும் குதிரைகளால் நோயாளிகள் அவதி அடைந்துள்ளனர்.
ஊட்டி நகரின் பெரும்பாலான இடங்களில் குதிரைகள், கால்நடைகள் உலா வருவது அதிகரித்துள்ளது. இதனால், இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஊட்டி ஆஸ்பிடல் சாலையில் குதிரைகள் கடந்த சில நாட்களாக அதிகளவில் சுற்றி வருகின்றன. மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் குதிரைகள் நடமாட்டத்தால் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பொது மக்கள் கூறுகையில், 'நகராட்சி நிர்வாகம் நகரில் சுற்றி தெரியும் குதிரைகள் மற்றும் கால்நடைகளை பிடித்து சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்,' என்றனர்.