/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பூங்கா சாலையில் குதிரைகள் உலா ;போக்குவரத்துக்கு இடையூறு
/
பூங்கா சாலையில் குதிரைகள் உலா ;போக்குவரத்துக்கு இடையூறு
பூங்கா சாலையில் குதிரைகள் உலா ;போக்குவரத்துக்கு இடையூறு
பூங்கா சாலையில் குதிரைகள் உலா ;போக்குவரத்துக்கு இடையூறு
ADDED : ஜன 21, 2024 10:51 PM

ஊட்டி:ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில், குதிரைகள், கால்நடைகள் உலா வருவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
சுற்றுலா நகரமான ஊட்டியில், நாள்தோறும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் இருக்கும். குறிப்பாக, ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து, தாவரவியல் பூங்காவுக்கு செல்லும் சாலையில், கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இச்சாலையில், பாரம்பரியமிக்க திரையரங்கு, பழங்குடியினர் பண்பாட்டு மையம், செவித்திறன் இழந்தோர் பள்ளி விடுதி மற்றும் சுற்றுலா பயணியர் விடுதி, தனியார் மகப்பேறு மருத்துவமனை உட்பட, கடைகள், குடியிருப்புகள் நிறைந்து காணப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து, தாவரவியல் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இச்சாலையை பயன்படுத்துகின்றனர். இச்சாலை நாள்தோறும் நெரிசலுடன் பரபரப்பாக காணப்படுகிறது.
இந்நிலையில், சமீப காலமாக, இச்சாலையில் குதிரைகள் உட்பட, கால்நடைகள் நாள்தோறும் உலா வருவது தொடர்கிறது. இவைகள், சாலையில் நீண்ட நேரம் நின்று விடுவதால், போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. தவிர, விபத்து அபாயமும் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் விபத்து அபாயத்தை தடுக்க குதிரைகள் உட்பட, கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என, வலியுறுத்தப்பட்டுள்ளது.