/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உழவரை தேடி வேளாண்மை திட்ட சிறப்பு முகாம்கள் விவசாயிகள் பயன் பெற தோட்டக்கலை அழைப்பு
/
உழவரை தேடி வேளாண்மை திட்ட சிறப்பு முகாம்கள் விவசாயிகள் பயன் பெற தோட்டக்கலை அழைப்பு
உழவரை தேடி வேளாண்மை திட்ட சிறப்பு முகாம்கள் விவசாயிகள் பயன் பெற தோட்டக்கலை அழைப்பு
உழவரை தேடி வேளாண்மை திட்ட சிறப்பு முகாம்கள் விவசாயிகள் பயன் பெற தோட்டக்கலை அழைப்பு
ADDED : ஜூன் 06, 2025 10:17 PM
ஊட்டி, ;'உழவரை தேடி' வேளாண்மை திட்ட சிறப்பு முகாம்களில் விவசாயிகள் பங்கேற்று பயனடைய வேண்டும்,' என, தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தி உள்ளது.
நீலகிரி தோட்டக்கலை துறை அறிக்கை:
நீலகிரி மாவட்டத்தில் உழவரை தேடி வேளாண்மை என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் துறைகளில், 'கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவு துறை, வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள்,' ஆகியோர் உழவர்களை, அவர்களது வருவாய் கிராமங்களில் நேரடியாக சந்தித்து தேவையான ஆலோசனைகளை வழங்குகின்றனர்.
மேலும், வேளாண்மையை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் பயிர் சார்ந்த தொழில்நுட்பங்கள்; வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் சார்பு துறைகளின் திட்டங்கள் குறித்து எடுத்து உழவர்களிடம் எடுத்து கூறி, அவர்கள் பயன்பெறும் வகையில் மாதம் இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் முகாம் நடத்தப்பட உள்ளது. மொத்தம் உள்ள, 102 வருவாய் கிராமங்களிலும் ஓராண்டுக்குள் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
முதற்கட்டமாக மாவட்டத்தில், 4 வட்டாரங்களில் உள்ள 8 வருவாய் கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடந்து வருகிறது. அதற்கான தேதிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. முகாம்களில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு, தேவையான தொழில்நுட்ப அறிவுரைகள், மானிய திட்டம் சார்ந்த விளக்கங்கள், மீன் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, கருவிகளின் பயன்கள் போன்ற தகவல்கள் அளிக்கப்படும். இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.