/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசின் போனஸ் தொகை கிடைக்காமல் தோட்டக்கலை பணியாளர்கள் ஏமாற்றம்
/
அரசின் போனஸ் தொகை கிடைக்காமல் தோட்டக்கலை பணியாளர்கள் ஏமாற்றம்
அரசின் போனஸ் தொகை கிடைக்காமல் தோட்டக்கலை பணியாளர்கள் ஏமாற்றம்
அரசின் போனஸ் தொகை கிடைக்காமல் தோட்டக்கலை பணியாளர்கள் ஏமாற்றம்
ADDED : ஜன 14, 2025 01:39 AM
குன்னுார்:
நீலகிரியில், தோட்டக்கலை பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படாமல் உள்ளதால் ஏமாற்றமடைந்துள்ளனர்.
தோட்டக்கலை மாவட்டமாக உள்ள நீலகிரியில். சுற்றுலா பயணிகளை கவரும், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குன்னுார் சிம்ஸ் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, மரவியல் பூங்கா மற்றும் குன்னுார் கல்லார் பழ பண்ணைகள், தும்மனட்டி தோட்டக்கலை பண்ணை, பழவியல் நிலையம் ஆகியவை தோட்டக்கலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.
ஆண்டு தோறும் இங்குள்ள தோட்டக்கலை பணியாளர்களுக்கு பொங்கலுக்கு முன்பு போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.
இதில், இந்த ஆண்டு போனஸ் தொகை, 1,000 ரூபாய் அரசு வழங்கும் உத்தரவு இருந்தும் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது.
300க்கும் மேற்பட்ட தோட்டக்கலை பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் தொகை கிடைக்காமல் கவலையில் உள்ளனர்.