ADDED : ஜூன் 13, 2026 03:07 AM

அ நிறம் | அளவு
ஊட்டி: ஊட்டி இளைஞர் விடுதியில் ஒப்பந்த அடிப்படையில் காப்பாளர் மற்றும் கணக்காளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கு, ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மாத சம்பளம், 15,000 ரூபாய். ஒரு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பணி நிரப்பப்படும். விண்ணப்பதாரர்கள் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் தேர்ச்சி, விடுதி அலுவலகம் அல்லது அதற்கு ஒத்த நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் அவசியம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பத்தை, மேலாளர் (பொ), இளைஞர் விடுதி ஊட்டி-643001, நீலகிரி (0423 244361) என்ற முகவரியில், 15ம் தேதி மாலை, 5:00 ம ணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும்.
