/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கனமழைக்கு இடிந்த வீடு: கூலி தொழிலாளி பலி ; குடும்பத்திற்கு, 4 லட்சம் ரூபாய் நிவாரண உதவி

ADDED : டிச 03, 2024 06:32 AM

ஊட்டி; ஊட்டியில் கனமழைக்கு வீடு இடிந்து விழுந்ததில், கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இந்நிலையில், ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட நொண்டிமேடு அருகே, ஒத்தமரம் பகுதியில் வீடு இடிந்து விழுந்து, ஆறுமுகம்,45, என்ற கூலி தொழிலாளி பலியானார்.
சம்பவ பகுதிக்கு, ஊட்டி ஆர்.டி.ஓ., சதீஷ், வருவாய் அதிகாரிகள், போலீசார் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இடிப்பாட்டில் சிக்கி உயிரிழந்த ஆறுமுகத்தின் உடலை மீட்ட போலீசார், ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு எடுத்து சென்றனர். ஊட்டி பி-1 போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன், ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு நேரில் வந்து, ஆறுமுகத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''மாநில முதல்வர் உத்தரவுப்படி பேரிடர் நிதியிலிருந்து, ஆறுமுகத்தின் தாய் சரசிடம், 4 லட்சம் ரூபாய்க்கான நிவாரண உதவியின் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
நீலகிரிக்கு வானிலை மையம் அறிவித்த 'ரெட் அலர்ட்' அறிவிப்பை அடுத்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.