நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்; பந்தலுார் அருகே அத்திமாநகர் கிராமத்தில், மழையால் வீடு இடிந்தது.
பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், முக்கிய நீரோடைகள் மற்றும் சதுப்பு நிலங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அத்திமாநகர் என்ற இடத்தில் ராமாயி என்பவரின் வீட்டு சுவர் இடிந்தது. அதில், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட குடியிருப்பை வருவாய் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். 'பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்,' என, தெரிவிக்கப்பட்டது.