/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வீடு கட்டும் உத்தரவை பழங்குடியினரிடம் வழங்க வேண்டும்: அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ., அறிவுரை
/
வீடு கட்டும் உத்தரவை பழங்குடியினரிடம் வழங்க வேண்டும்: அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ., அறிவுரை
வீடு கட்டும் உத்தரவை பழங்குடியினரிடம் வழங்க வேண்டும்: அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ., அறிவுரை
வீடு கட்டும் உத்தரவை பழங்குடியினரிடம் வழங்க வேண்டும்: அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ., அறிவுரை
ADDED : அக் 30, 2025 10:53 PM

பந்தலூர்:  பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதிகளில்,  பழங்குடியின மக்களுக்கான வீடுகள் கட்டுவதற்கான உத்தரவுகளை பழங்குடியினரிடமே வழங்க வேண்டும். என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதிகளில், குரும்பர், காட்டு நாயக்கர், பனியர் சமுதாய பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.  இவர்களுக்கு வீடுகள் கட்ட அரசு மூலம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டு, வீடுகள்  கட்டப்படுகிறது.
ஏற்கனவே மூன்று லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தரமான வீடுகள் கட்ட முடியாத நிலையில் பழங்குடியின பயனாளிகள் பாதிக்கப்பட்டனர்.
தற்போது, 5.74- லட்ச ரூபாயாக நிதி அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் பந்தலூர் அருகே கூலால் பகுதியில், குடியிருப்புகள் கட்டும் பணிகளை ஆய்வு செய்த அ.தி.மு.க.  எம். எல் .ஏ. ஜெயசீலன் பழங்குடியின மக்களிடம் பேசுகையில், 'பழங்குடியின மக்களுக்கான தொகுப்பு வீடுகள் கட்ட, நிதியை அதிகரிக்க செய்ய வேண்டுமென, சட்டமன்றத்தில் பேசியதன் விளைவாக தற்போது நிதி அதிகரிக்கப்பட்டு உள்ளது.
பழங்குடியின மக்களுக்கான வீடுகள் கட்டுவதற்கான பணி உத்தரவுகளை, உள்ளாட்சி நிர்வாகங்கள் ஒப்பந்ததாரர்களிடம் வழங்குவதை நிறுத்த வேண்டும்.
பயனாளிகளாக உள்ள சம்பந்தப்பட்ட பழங்குடியின மக்களிடம், வேலைக்கான உத்தரவுகளை வழங்கி அவர்கள் விருப்பப்படி கட்டுமான பணியாளர்கள் வழங்கி வீடுகளை தரமாக கட்டிக் கொள்ள வேண்டும்.
ஒப்பந்ததாரர்களிடம் வீடு கட்டும் பணி வழங்குவதால், தரமற்ற முறையில் கட்டப்படும் தொகுப்பு வீடுகள், விரைவில் பழுதடைந்து குடியிருக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே, பழங்குடியின மக்கள் விழிப்புடன் இருந்து தங்களுக்கான குடியிருப்புகளை, தரமான முறையில் கட்டிக் கொள்ள முன்வர வேண்டும்.' இவ்வாறு, அவர் பேசினார்.

