/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நெலாக்கோட்டை குழிமூலா பழங்குடி கிராமத்தில் வீடு கட்டும் பணி துவக்கம்; 'தினமலர்' செய்தி எதிரொலி

ADDED : மார் 21, 2025 09:58 PM
பந்தலுார்,; பந்தலுார் அருகே நெலாக்கோட்டை குழிமூலா பழங்குடியின கிராமத்தில், 25க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன.
அதில், ஏழு வீடுகள் குடிசை வீடுகளாகவே உள்ளது. அதில், ஒருவர் வீட்டை யானை இடித்த நிலையில், குடியிருக்க வீடு இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் படங்களுடன் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து முதல் கட்டமாக ஐந்து வீடுகள் கட்டுவதற்கு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பணி துவக்கப்பட்டு உள்ளது.
பழங்குடியினர் கூறுகையில், 'இங்குள்ள குடிசை வீடுகளை மாற்றி தங்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டித் தர அதிகாரிகள் முன் வந்ததால், நிம்மதி ஏற்பட்டுள்ளது. அதேவேளையில் வீடுகளை தரமாக கட்டிதர வேண்டும்,' என்றனர்.