/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மழையால் இடியும் வீடுகள்; மண்சரிவால் மக்கள் அச்சம்
/
மழையால் இடியும் வீடுகள்; மண்சரிவால் மக்கள் அச்சம்
ADDED : நவ 04, 2024 09:41 PM

குன்னுார்; குன்னுாரில் ஏழை மக்கள் வசிக்கும் இடங்களில் மழையால் வீடுகள்; தடுப்புச் சுவர்கள் விழுந்து வரும் நிலையில் சீரமைப்பு பணிகளில் வேகமில்லை.
குன்னுார் பகுதிகளில் நள்ளிரவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல இடங்களிலும், வீடுகள் இடிந்தும் மண்சரிவுகள் ஏற்படுவதுடன் தடுப்பு சுவர்கள் இடிந்து வருகிறது. நேற்று காந்திபுரம் பகுதியில் இரு குடிசை வீடுகள் இடிந்தன.
அருகிலுள்ள பல வீடு களிலும், நடைபாதையிலும் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் அபாயம் உள்ளது. குன்னுார் ஆழ்வார்பேட்டை பகுதியில் நடைபாதையுடன் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது.
இந்த பகுதியில் மேலும் முழுமையாக இடிந்து நடைபாதை துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.
இந்நிலையில், கடந்த, 3ம் தேதி இரவு பெய்த மழையில் கிருஷ்ணாபுரம் ஆற்றோர தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. ஆளும் கட்சியினரின் வீடுகளுக்கு வாகனங்கள் செல்ல சாலையின் ஒரு பகுதியில் மூட்டைகள் அடுக்கி பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது.
அதே நேரத்தில் ஆற்றின் பாலத்தில் மிகப்பெரிய குழி ஏற்பட்டு வரும் நிலையில் அதற்கான பணிகள் நடக்கவில்லை.
மக்கள் கூறுகையில்,'ஏழை, எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளில் சீரமைப்பு துரித கதியில் மேற்கொள்ள வேண்டும். இரவில் மழை பெய்வதால், போதிய பணிகளை விரைவாக மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.