/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மண் சரிவால் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்: அச்சத்தில் மக்கள் அச்சத்தில் மக்கள்

ADDED : நவ 17, 2024 10:09 PM

குன்னுார்; குன்னுார்-- காட்டேரி ரோடு பகுதியில், முன்புறம் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் வீடுகள் அந்தரத்தில் உள்ளன.
குன்னுார் பகுதிகளில் பெய்து வரும் மழையால் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. காட்டேரி ரோடு குடியிருப்பு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு வீடுகள் அந்தரத்தில் உள்ளன. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில், ராஜாஜி நகர் நுாலகம் அருகே அங்கன்வாடி பகுதியில், நேற்று முன்தினம் மண்சரிவு ஏற்பட்டு, மழை நீர் பெருக்கெடுத்து சாலையில் ஓடியது. இதனால், வாகனங்கள் செல்லவும், மக்கள் நடமாடவும் சிரமம் ஏற்பட்டது. நேற்று நகராட்சி சார்பில் பொக்லைன் உதவியுடன் மண் அகற்றப்பட்டு சீரமைக்கப்பட்டது.
மக்கள் கூறுகையில், 'பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சில இடத்தில் மட்டும் சிறிய தடுப்புகளுடன் நடைபாதை அமைத்து தரப்பட்டது. தற்போது நடைபாதை வசதி, தடுப்பு சுவர் உட்பட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. எனவே, இப்பகுதிகளை ஆய்வு செய்து, தடுப்பு சுவர் எழுப்புவதுடன் அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும்,' என்றனர்.