/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வீட்டு வசதி வாரிய பயனாளிகள் குலுக்கல் முறையில் தேர்வு
/
வீட்டு வசதி வாரிய பயனாளிகள் குலுக்கல் முறையில் தேர்வு
வீட்டு வசதி வாரிய பயனாளிகள் குலுக்கல் முறையில் தேர்வு
வீட்டு வசதி வாரிய பயனாளிகள் குலுக்கல் முறையில் தேர்வு
ADDED : ஜன 31, 2024 11:43 PM
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடு குடியிருப்பு பயனாளிகள் தேர்வு, குலுக்கல் முறையில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில், பெரியநாயக்கன்பாளையம் திட்ட பகுதியில், 1800 அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதில், தங்களது பங்களிப்பு தொகையினை முழுமையாக செலுத்தியுள்ள, 816 பயனாளிகளுக்கு மட்டும் குடியிருப்புகள், குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
பங்களிப்பு தொகை செலுத்திய பயனாளிகள், கோவை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வாயிலாக வழங்கப்பட்ட தகவல் கடித நகல், பணம் செலுத்திய ரசீது நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்.
மேலும் கணவன் மற்றும் மனைவி, 2 பாஸ்போர்ட் அளவு போட்டோ, ஸ்மார்ட் கார்டு நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் முதல் பக்கம் ஆகிய ஆவணங்களுடன் தங்களுக்கான குடியிருப்பை தேர்வு செய்ய, பெரியநாயக்கன்பாளையம் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், நாளை வெள்ளிக்கிழமை காலை, 10:00 மணி முதல் மாலை, 2:00 மணி வரை நடைபெற உள்ள குலுக்களில் நேரில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இத்தகவலை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிர்வாக இன்ஜினியர் தெரிவித்துள்ளார்.