sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ இ- -பாஸ் நடைமுறையால் எவ்வளவு வாகனங்களை அனுமதிக்கலாம்?

 இ- -பாஸ் நடைமுறையால் எவ்வளவு வாகனங்களை அனுமதிக்கலாம்?

 இ- -பாஸ் நடைமுறையால் எவ்வளவு வாகனங்களை அனுமதிக்கலாம்?


ADDED : மார் 02, 2026 05:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 05:14 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: நீலகிரியில், இ- -பாஸ் நடைமுறையில் உள்ள நிலையில் எவ்வளவு வாகனங்களை அனுமதிக்கலாம் என பெங்களூரு ஐ.ஐ.எம்., நடத்தி வரும் ஆய்வு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

நீலகிரி மாவட்டத்திற்குள் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2024ம் ஆண்டு ஏப்., மாதம் சுற்றுசூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்கு சென்னை ஐ கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஊட்டிக்கு நாள்தோறும் வேன்கள் உட்பட 20 ஆயிரம் வாகனங்கள் வருவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும்,

ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐ.ஐ.டி., பெங்களூரு ஐ.ஐ.எம்., ஆகியவை ஆய்வு செய்ய உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டது.

இதனை தொடர்ந்து ஐ.ஐ.டி., மற்றும் ஐ.எம்.எம்., ஆகியவை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் வரை ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் இ----பாஸ் முறையை நடைமுறைப்படுத்த கோர்ட் உத்தரவிட்டது.

8000 வாகனங்கள் அனுமதி கடந்த ஆண்டு மார்ச் 13ம் தேதி இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது, இயற்கை, பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்கவும், சுற்றுசூழல் பாதுகாப்பை கட்டுபடுத்தவும் நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளில் நுழையும் வாகனங்களை கட்டுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே வார நாட்களில் நீலகிரிக்கு 6 ஆயிரம் வாகனங்களும், வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களும் மட்டுமே நீலகிரிக்குள் அனுமதிக்க வேண்டும். எத்தனை வாகனங்களை அனுமதிக்கலாம் என்ற ஆய்வு முடியும் வரை , கோடை காலத்தில் ஏற்படும் நெரிசலை கட்டுபடுத்தும் வகையிலும், இந்த கட்டுபாடு விதிக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும். இ--பாஸ் முறையை அமல்படுத்தப்படும். என, கோர்ட் உத்தரவிட்டது.

ஐ.ஐ.எம்., ஆய்வு தொடர்ந்து இ-பாஸ் முறை நடைமுறையில் உள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்திற்குள் எவ்வளவு வாகனங்களை அனுமதிப்பது என்பது குறித்து பெங்களூரு ஐ.ஐ.எம்., ஆய்வு நடத்தி வருகிறது. இந்த ஆய்வு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோடை சீசன் சமயத்தில் மட்டுமே போக்குவரத்து கழகம் வாயிலாக சர்க்யூட் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. இனிவரும் காலங்களில் தொடர் விடுமுறை சமயங்களிலும் நகரில் நெரிசல்களை தவிர்க்கும் விதமாக சர்க்யூட் பஸ்கள் இயக்குவது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us