தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தீ விபத்தில் சமயோசிதமாக செயல்படுவது எப்படி? தீயணைப்பு வீரர்கள் செயல் முறை விளக்கம்

தீ விபத்தில் சமயோசிதமாக செயல்படுவது எப்படி? தீயணைப்பு வீரர்கள் செயல் முறை விளக்கம்

தீ விபத்தில் சமயோசிதமாக செயல்படுவது எப்படி? தீயணைப்பு வீரர்கள் செயல் முறை விளக்கம்


UPDATED : ஆக 30, 2026 06:04 PM

ADDED : ஆக 30, 2026 06:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 30, 2026 06:04 PM ADDED : ஆக 30, 2026 06:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்னூர்:நீலகிரி மாவட்டம், குன்னூரில், நிறுவனங்கள், வீடுகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டால், அங்கிருப்பவர்களை உடனடியாக தீயை அணைக்கும் வகையில், 2 நாட்கள் சிறப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் செயல் விளக்கம் நடந்தது. குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் தட்சிணாமூர்த்தி தலைமையில் நடந்த இந்த முகாமில், தீ விபத்து ஏற்படும் போது பதற்றமின்றி சமயோசிதமாக செயல்படுவது; தீயை தடுத்து கட்டுப்படுத்துவது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது.

தொடர்ந்து, முன்னணி தீயணைப்பாளர்கள் பாண்டியராஜன், பவுன்ராஜ் ஆகியோர், தீ பரவும் விதம் ; தீ விபத்துகளை எளிய முறையில் அணைத்தல் குறித்த நேரடி செயல் விளக்கத்தை செய்து காண்பித்தனர். முகாமில் பங்கேற்ற பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள், தீயணைப்பு உபகரணங்களை நேரடியாக கையாண்டு பற்றி எரிந்த தீயை அணைத்து பயிற்சி பெற்றனர். சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us