/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு முகாம்
/
மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு முகாம்
ADDED : மார் 05, 2024 11:33 PM

ஊட்டி;-ஊட்டியில் போலீ சாரின் சார்பில் மாணவர் களுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது.
மாவட்ட எஸ்.பி., சுந்தரவடிவேல் உத்தரவின் பேரில், ஊட்டி ஊரக உட்கோட்ட போலீஸ், சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவின் சார்பில், ஊட்டியில் ஹில்பங்க் அருகே உள்ள ஜே.எஸ்.எஸ்., கல்லுாரியில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
நிகழ்ச்சியில், மாணவ, மாணவியர் மத்தியில் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டங்கள்; சமூக நீதி, மனித உரிமை, சமத்துவம் ஆகியவற்றின் அவசியம்; மதுவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பின், போக்குவரத்து விதிகள் குறித்தும் விழிப்புணர்வு கருத்துக்கள் எடுத்து கூறப்பட்டது. பேச்சு, கவிதை, ஓவிய போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கூடுதல் ஏ.டி.எஸ்.பி., சவுந்தரந்தர் ராஜன், ரூரல் டி.எஸ்.பி.,விஜயலட்சுமி, ஜே. எஸ்.எஸ்., கல்லுாரி முதல்வர் சந்திரசேகர், வக்கீல் சந்திர போஸ், இன்ஸ்பெக்டர் மீனாபிரியா, சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு புள்ளியியல் ஆய்வாளர் குணசீலன் உட்பட பலர் பங்கேற்றனர்.

