/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மனிதநேய வார விழா கண்காட்சி அரங்கு
/
மனிதநேய வார விழா கண்காட்சி அரங்கு
ADDED : ஜன 24, 2024 11:53 PM
ஊட்டி : ஊட்டி பிரீக்ஸ் பள்ளியில் மனிதநேய வார விழாவை முன்னிட்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை கலெக்டர் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
மனித நேய வார விழா, 24ல் துவங்கி, 30ம் தேதி வரை நடக்கிறது. இதனை ஒட்டி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், உள்ளிட்ட துறைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாவட்ட தொழில் மையம் சார்பில், இன்று (25ம் தேதி) முன்னேற்ற சிந்தனை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. நாளை (26ம் தேதி) அரசு கலை கல்லுாரி நாட்டு நற்பணி திட்டம் மூலமாக, கல்லுாரி மாணவ மாணவியர் ஒரு பழங்குடியினர் கிராமத்திற்கு சென்று தேநீர் அருந்தும் நிகழ்ச்சியும், 27ம் தேதி, நல்லிணக்க மற்றும் வன்கொடுமை தடுப்பு கூட்ட கருத்தரங்கு நடக்கிறது.
வரும், 28ல் மாவனல்லா ஜி.டி.ஆர்., பள்ளியில் கலை நிகழ்ச்சியும், 29ல் பேச்சு, கட்டுரை, நாடகப்போட்டியுடன், கலை நிகழ்ச்சி மற்றும் 30ம் தேதி பழங்குயினர் பண்பாட்டு மையத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. வருவாய் கோட்டாட்சியர் மகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.