/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழங்குடி கிராமத்தில் மனைவியை வெட்டிய கணவன் கைது
/
பழங்குடி கிராமத்தில் மனைவியை வெட்டிய கணவன் கைது
ADDED : ஜூன் 23, 2025 04:37 AM
கோத்தகிரி:கோத்தகிரி அருகே பழங்குடியின பெண் இறப்பு தொடர்பாக, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோத்தகிரி செம்மனாரை பகுதியை சேர்ந்த சிவா மற்றும் ராதா தம்பதியருக்கு, 18 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.
இவர்களுக்கு, ஆறு வயதில் ஒரு மகன்; இரண்டு வயதில், ஒரு மகள் உள்ளனர். இருவரும், கூலி வேலை செய்து வருகின்றன.
குடி பழக்கம் உள்ள சிவா, மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால், அதிருப்தி அடைந்த ராதா, தனது தாயார் வீட்டுக்கு சென்றுள்ளார். பலமுறை, சிவா அழைத்தும், தனது மனைவி வீட்டிற்கு வரவில்லை. இதனால் விரக்தி அடைந்த சிவா, கடந்த 20ம் தேதி தனது மனைவின் கழுத்தை வெட்டியுள்ளார்.
அருகில் இருந்தவர்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம், ராதாவை கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராதா சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்தார். கோத்தகிரியில் சிவா கைது செய்யப்பட்டார்.