தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மனைவியை கொன்ற கணவன் கைது

மனைவியை கொன்ற கணவன் கைது

மனைவியை கொன்ற கணவன் கைது


ADDED : செப் 22, 2026 05:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2026 05:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாலக்காடு: பாலக்காடு மாவட்டம், கொடுவாயூர் எத்தனுார் பிட்டுப்பீடிகை பகுதியை சேர்ந்தவர் தச்சு தொழிலாளி மணிகண்டன், 36. இவரது மனைவி அனுப்பிரியா, 31. தம்பதியினர் சில மாதங்களாக வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் தம்பதியிடையே குடும்ப பிரச்னை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மணிகண்டன், துப்பட்டாவால் மனைவியின் கழுத்தை நெரித்ததில், அனுப்பிரியா மயங்கி விழுந்தார்.

இதையடுத்து, மணிகண்டனே இச்சம்பவம் குறித்து உறவினர்களுக்கும், புதுநகரம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். உறவினர்கள் அனுப்பிரியாவை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சித்துார் டி.எஸ்.பி. சசிதரன் தலைமையிலான போலீசார், மணிகண்டனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us