/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நான் டாடா பிர்லா இல்லை பெண்களிடம் எம்.பி., ராஜா பாய்ச்சல்
/
நான் டாடா பிர்லா இல்லை பெண்களிடம் எம்.பி., ராஜா பாய்ச்சல்
நான் டாடா பிர்லா இல்லை பெண்களிடம் எம்.பி., ராஜா பாய்ச்சல்
நான் டாடா பிர்லா இல்லை பெண்களிடம் எம்.பி., ராஜா பாய்ச்சல்
ADDED : பிப் 18, 2025 06:50 AM

அன்னுார்: 'நான் டாடா, பிர்லா இல்லை,' என நீலகிரி எம்.பி., ராஜா, இலவச வீடு கேட்ட பெண்களிடம் ஆவேசமாக பதில் அளித்தார். இதனால், மனு கொடுக்க வந்த அப்பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கோவை மாவட்டம், அன்னூர் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை துவக்கி வைக்க நீலகிரி எம்.பி., ராஜா, நேற்று வந்தார்.
அன்னூர் அரசு மருத்துவமனை வளாகத்தில், சொக்கம்பாளையம் மற்றும் செல்லனுர் காலனியைச் சேர்ந்த பெண்கள், 'எங்களது வீடுகள் 1989ல் கட்டப்பட்டது. 35 ஆண்டுகள் ஆகிவிட்டது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்து உள்ளன. உடனே வேறு வீடு கட்டித் தர வேண்டும்,' என்றனர்.
உடனே, அன்னூர் தாசில்தாரை தொடர்பு கொண்டு அவர்களுக்கு வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்கும் படி ராஜா கூறினார்.
அதன் பிறகும், பெண்கள், 'எங்களுக்கு கண்டிப்பாக வீடு மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வேண்டும்,' என்றனர்.
இதனால் எரிச்சலடைந்த ராஜா, ''நான் டாட்டா, பிர்லா இல்லை. உங்களை போல நானும் சாதாரணமானவன் தான். எனவே திரும்பத் திரும்ப இது குறித்து பேசாதீர்கள்,'' என்றார்.
ராஜாவின் பதிலால், வீடு கட்டித்தரக் கேட்ட பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

