'35 ஆயிரம் ஏக்கர் செக்ஷன்--17 நில பிரச்னைக்கு தீர்வு காண்பேன்'
'35 ஆயிரம் ஏக்கர் செக்ஷன்--17 நில பிரச்னைக்கு தீர்வு காண்பேன்'
ADDED : ஏப் 02, 2026 07:04 PM

கூடலுார்: நீலகிரி மாவட்டம், கூடலுார் சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., சார்பில், போட்டியிடும் தற்போதைய எம்.எல்.ஏ., வக்கீல் பொன்ஜெயசீலன், நேற்று ஊர்வலமாக வந்து, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., குணசேகரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அவர் நிருபர்க்ளிடம் கூறியதாவது:
கூடலுாரில் உள்ள, 35 ஆயிரம் ஏக்கர் செக்ஷன்-17 நிலத்தில், 31 ஆயிரம் ஏக்கரை வனமாக மாற்ற அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்துள்ளது. இந்த சூழ்நிலையில் மக்கள் பாதிக்கப்படாத வகையில் தீர்வு காணும் வகையில், இந்த வழக்கில் என்னையும் சேர்த்து கொள்ள சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்துள்ளேன். என்னை வெற்றி பெற செய்தால், செக்ஷன்-17 நிலத்தில் வசிப்பவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.
கூடலுாரில் மலர் தோட்டம் அமைக்க மத்திய அரசு, 72 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியது. அந்த திட்டத்தை மாநில அரசு ஊட்டிக்கு மாற்றப்பட்டுள்ளது. மீண்டும் அந்த திட்டத்தை கூடலுாருக்கு கொண்டு வருவேன். இங்குள்ள அரசு தேயிலை தோட்ட நிலத்தை, அங்கு பணியாற்றி வரும்,2,300 குடும்பங்களுக்கு, தலா இரண்டு ஏக்கர் வீதம் குத்தகைக்கு வழங்க நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
