/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேவாலய பணியாளர்கள் 14 பேருக்கு அடையாள அட்டை
/
தேவாலய பணியாளர்கள் 14 பேருக்கு அடையாள அட்டை
ADDED : பிப் 05, 2025 11:55 PM
ஊட்டி: தேவாலயங்களில் பணிபுரியும், 14 உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்தார்.
கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து வீட்டு மனை பட்டா , முதியோர் உதவித்தொகை , கல்வி உதவி தொகை, வங்கி கடன், குடிசை மாற்று வாரிய வீடு, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 131 மனுக்கள் பெறப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின் நலத்துறையின் சார்பில் கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற, 14 உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.
மேலும் , 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தல் பணியின் போது மரணம் அடைந்த மைனலை ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியின் தலைமை ஆசிரியை சகுந்தலாவின் வாரிசுதாரர்கள் இருவருக்கு மாநில அரசால் வழங்கப்படும் இழப்பீட்டு தொகை, 7.50 லட்சம் ரூபாய் பெறுவதற்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டது.
சிறந்த குடிமக்கள் நுகர்வோர் மன்றமாக, கூடலுார் ஐ.எம்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு கேடயம், நற்சான்றிதழ் மற்றும், 5000 ரூபாய் பரிசுக்கான காசோலை வழங்கப்பட்டது.
உலக நுகர்வோர் பாதுகாப்பு தின விழாவில் மண்டல அளவில் பள்ளிகளுக்கு இடையே கவிதை போட்டியில் வெற்றி பெற்ற கூடலுார் வட்டம் கரியசோலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பாத்திமா ஷிபாக்கு கேடயம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) கவுசிக் , மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.