தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அம்மா உணவகத்தில் இட்லி 'கட்' தொழிலாளர்கள் 'அப்செட்'

 அம்மா உணவகத்தில் இட்லி 'கட்' தொழிலாளர்கள் 'அப்செட்'

 அம்மா உணவகத்தில் இட்லி 'கட்' தொழிலாளர்கள் 'அப்செட்'


ADDED : மார் 03, 2026 06:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2026 06:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்னுார்: குன்னுார் வண்டிப்பேட்டை பகுதியில் கடந்த, 2014ல் அம்மா உணவகம், துவங்கப்பட்டது. நகராட்சி சார்பில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில், ஒரு இட்லி ஒரு ரூபாய், பொங்கல், தயிர் சாதம், சாம்பார் சாதம், தக்காளி சாதம் ஆகியவை, 5 ரூபாய் என மிக குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுவதால், கூலி தொழிலாளர்கள், ஏழை எளிய மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த, 20 நாட்களுக்கும் மேலாக காலை நேரங்களில் இட்லி வழங்கப்படாமல் உள்ளது. அதற்கு பதிலாக பொங்கல், தக்காளி சாதம், சாம்பார் சாதம் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.மாவாட்டும் இயந்திரம் பழுதாகியதால் நகராட்சி நிர்வாகம் இரு முறை பழுதுபார்த்தும் பயனில்லாமல் போனது. மீண்டும் தீர்வு காணப்படாததால், தற்போது காலை நேரங்களில் இட்லி உட்கொள்ள வரும் தொழிலாளர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.

இது மட்டுமின்றி, 12 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட பிரிட்ஜ் பயனில்லாமல் கிடக்கிறது. சமையலறையில் பல இடங்களிலும் மிகப்பெரிய குழிகள் ஏற்பட்டு, மகளிர் சிரமத்துடன் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கூலி தொழிலாளர்கள் கூறுகையில், 'முன்னாள் முதல்வர் ஜெ., கொண்டு வந்த இந்த திட்டத்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்த போதும், காலை நேரங்களில் இட்லி வழங்காதது ஏமாற்றம் அளிக்கிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் புதிய உபகரணங்களை வழங்குவதுடன், பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்,' என் றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us