/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அபாய மரங்களால் ஆபத்து அகற்றினால் இருக்காது விபத்து
/
அபாய மரங்களால் ஆபத்து அகற்றினால் இருக்காது விபத்து
அபாய மரங்களால் ஆபத்து அகற்றினால் இருக்காது விபத்து
அபாய மரங்களால் ஆபத்து அகற்றினால் இருக்காது விபத்து
ADDED : நவ 15, 2024 09:18 PM

ஊட்டி; ஊட்டி - குன்னுார் சாலை வேலிவியூ பகுதியில் காணப்படும் அபாயகரமான சீகை மரங்களால், ஆபத்து அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், சாலையோரம் மற்றும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் உள்ள அபாய மரங்கள், மழை காலங்களில் விழுந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க, ஊட்டி, குன்னுார், கோத்தகிரி மற்றும் குந்தா உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அபாய மரங்கள்அகற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஊட்டி- குன்னுார் சாலையில், வேலிவியூ பகுதியில் சாலையோரத்தில் போதிய வேர்ப்பிடிப்பு இல்லாமல், சீகை மரங்கள் விழும் நிலையில் சாய்ந்து காணப்படுகிறது. 'இந்த மரங்களை அகற்ற வேண்டும்,' என, தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
மழை தீவிரம் அடையும் பட்சத்தில், மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கும் நிலை உள்ளது.
எனவே, அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பு, இப்பகுதியில் உள்ள மரங்களை அகற்ற நடவடிக்கை எடுப்பது அவசியம்.