sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மழை அதிகரித்தால் கேரட், உருளை கிழங்கில்... அழுகல் நோய் அபாயம்!மலை மாவட்ட விவசாயிகளுக்கு அறிவுரை

/

மழை அதிகரித்தால் கேரட், உருளை கிழங்கில்... அழுகல் நோய் அபாயம்!மலை மாவட்ட விவசாயிகளுக்கு அறிவுரை

மழை அதிகரித்தால் கேரட், உருளை கிழங்கில்... அழுகல் நோய் அபாயம்!மலை மாவட்ட விவசாயிகளுக்கு அறிவுரை

மழை அதிகரித்தால் கேரட், உருளை கிழங்கில்... அழுகல் நோய் அபாயம்!மலை மாவட்ட விவசாயிகளுக்கு அறிவுரை


ADDED : ஜூலை 14, 2024 11:35 PM

Google News

ADDED : ஜூலை 14, 2024 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி;'தென்மேற்கு பருவமழை வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், கேரட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பயிர்களில் அழுகல் நோய் பரவ வாய்ப்பு உள்ளது; விவசாயிகள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,' என, தோட்டக்கலை துறை தெரிவித்துள்ளது.

நீலகிரியில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் ஆக., வரை தென்மேற்கு பருவமழை பெய்யும். கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கி அவ்வப்போது பெய்து வருகிறது,

இந்நிலையில், வரும் நாட்களில் மழை அதிகரித்தால், விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட தோட்ட கலைத்துறை அறிவுறுத்தி உள்ளது.

மழை அதிகரிக்க வாய்ப்பு


நடப்பாண்டு தென்மேற்கு பருவ மழை காலதாமதமானாலும் நீலகிரியில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், காற்றில் ஈரப்பதம் அதிகரித்து, மாவட்டத்தில் அதிகப்படியாக பயிரிடக்கூடிய கேரட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், வாழை போன்ற பயிர்களில் பூஞ்சான வளர்ச்சி மற்றும் பயிர்களில் அழுகல் நோய் அதிகப்படியாக பரவ வாய்ப்புள்ளது.

தோட்டக்கலை பயிர்களான வாழை, முட்டைகோஸ், பூண்டு, இஞ்சி, உருளைகிழங்கு, கேரட் போன்ற பயிர்களுக்கு, வயல்களில் அதிக நீர் தேங்காத வண்ணம் உரிய வடிகால் வசதி செய்து நீரப்பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.

காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க, காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் குச்சிகளால் முட்டுகொடுத்து புதியதாக நடவு செய்த செடிகள் சாயாத வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். வயல்களில் தேவையான பயிர் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

தொழு உரமிட வேண்டும்


பல்லாண்டு பயிர்களான மா, பலா, கொய்யா, எலுமிச்சை, கிராம்பு, ஜாதிக்காயில் காய்ந்த கிளைகளை அகற்றிடவும், மரங்களின் எடையை குறைக்கும் வகையில் கிளைகளை கவாத்து செய்யவும், மரத்தின் அடிப்பகுதியில் மண்ணை குவித்து வைக்கவும், தோட்டத்தில் தேவையான வடிகால் வசதி ஏற்படுத்தி, நோய்த்தடுப்பு மருந்துகள் வேர்பகுதியில் நனையும்படி தெளிக்க வேண்டும்.

கனமழை காற்று முடிந்தவுடன் மரங்களில் பாதிப்பு இருப்பின் உடனடியாக வேர்ப்பகுதியை சுற்றி மண் அணைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட கிளைகளை அகற்றி மரங்களுக்கு தேவையான தொழுஉரம் இட்டு, நோய் தடுப்பு முறைகளை பின்பற்ற வேண்டும்.

வாழை தார்களை மூடவேண்டும்


முக்கிய பயிரான வாழையில் காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில், மரத்தின் அடியில் மண்ணால் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். சவுக்கு அல்லது கற்பூர மர கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்தி முட்டுக்கொடுக்க வேண்டும்.

மரங்களை சுற்றிலும் சுத்தப்படுத்தி நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும். மேலும், வாழை தார்களை முறையாக மூடிவைத்து, 75 சதவீதத்திற்கு மேல் முதிர்ந்த தார்களை அறுவடை செய்தல் வேண்டும். பசுமை குடில்களை பொறுத்தவரை பசுமைக்குடிலின் அடிப்பாகத்தை பலமாக நிலத்துடன் இணைப்பு கம்பிகளால் இணைக்க வேண்டும். இதில், ஏதாவது சந்தேகம் இருந்தால் ஊட்டியில் உள்ள தோட்டக்கலை துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us