/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொழில் துவங்க ஆர்வமிருந்தால் மானியம்; மாவட்ட தொழில் மையம் ரூ.1.30 கோடி ஒதுக்கீடு

UPDATED : ஆக 27, 2025 07:25 AM
ADDED : ஆக 26, 2025 09:33 PM
ஊட்டி; மாவட்ட தொழில் மையத்தின் வாயிலாக பல்வேறு திட்டங்களின் கீழ், 1.30 கோடியில் தொழில் துவங்க பயனாளிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை, மாவட்ட தொழில் மையத்தின் சார்பில், பல்வேறு திட்டங்களின் வாயிலாக பயனாளிகளுக்கு மானிய உதவியுடன் கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் , செந்தில்குமார் என்பவர் தொழில் துவங்க, 42 லட்சம் ரூபாயில், 14.70 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை ஒழுங்குப்படுத்தும் திட்டத்தின் கீழ், 48 லட்சம் ரூபாயில், 10 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. 'நீட்ஸ்' திட்டத்தில், 13.34 லட்ச ரூபாயில் , 2.78 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மூலதான திட்டத்தின் கீழ், அட்டை பெட்டி , யூகலிபட்டஸ் வாசனை திரவியங்கள் தொடர்பான பணிகள், மெழுகுவர்த்தி, சாக்லெட் மற்றும் நினைவு பொருட்கள் உற்பத்தி உள்ளிட்ட திட்டங்களின் வாயிலாக தொழில் துவங்கும் பயனாளிகளின் இடத்துக்கு, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் கார்த்திகை வாசன் , உதவி இயக்குனர் திலகவதி உட்பட பலர் உடனிருந்தனர்.