/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குழியை மூடி தளம் அமைத்தால் வாகனங்களை 'பார்க்கிங்' செய்யலாம்
/
குழியை மூடி தளம் அமைத்தால் வாகனங்களை 'பார்க்கிங்' செய்யலாம்
குழியை மூடி தளம் அமைத்தால் வாகனங்களை 'பார்க்கிங்' செய்யலாம்
குழியை மூடி தளம் அமைத்தால் வாகனங்களை 'பார்க்கிங்' செய்யலாம்
ADDED : பிப் 12, 2025 10:48 PM

கோத்தகிரி,; கோத்தகிரி பழைய போலீஸ் குடியிருப்பு அருகே, குழியை மூடி தளம் அமைத்து, வாகனங்கள் 'பார்க்கிங்' செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும்.
கோத்தகிரி நகரில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இங்கு முக்கிய சாலையோரம் தனியார் வாகனங்கள் நிறுத்த இடமில்லை.
இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கிறது. சாலை ஓரத்தில், மருத்துவம் உட்பட அவசர தேவைகளுக்காக, சில நிமிடங்கள் வாகனங்களை நிறுத்தும் பட்சத்தில், போலீசாரால் அபராதம் விதிக்கப்படுகிறது.
இதனை தவிர்க்கும் பொருட்டு, பஸ் நிலையம் உட்பட, நகரப்பகுதியில், வருவாய்துறை, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான காலி நிலங்களை சமன் செய்து வாகனங்கள் நிறுத்துவதற்கு பயன்படுத்தலாம்.
மக்கள் கூறுகையில், கோத்தகிரி பஸ் நிலையம் அருகே, பழைய போலீஸ் ஸ்டேஷன் குடியிருப்பு -கூட்டுறவு பண்டகசாலை இடையே பெரிய குழி அமைந்துள்ளது. இந்த குழியில் தண்ணீர் செல்வதற்காக கால்வாய் அமைத்து மூடுவதுடன், சமன் செய்து தளம் அமைக்கும் பட்சத்தில், வாகனங்கள் நிறுத்த 'பார்க்கிங் ' தளம் அமையும். சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியம்.

