/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
போதை வஸ்துக்கள் பதுக்கி விற்றால்... ரூ.1 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை
/
போதை வஸ்துக்கள் பதுக்கி விற்றால்... ரூ.1 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை
போதை வஸ்துக்கள் பதுக்கி விற்றால்... ரூ.1 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை
போதை வஸ்துக்கள் பதுக்கி விற்றால்... ரூ.1 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை
ADDED : பிப் 16, 2024 12:23 AM
ஊட்டி:'மாவட்டத்தில் உள்ள கடைகளில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி
விற்பது கண்டறியப்பட்டதால், அதிக பட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம்
விதிக்கப்படும்,' என, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி எச்சரித்துள்ளார்.
மாநில அரசு, 'கஞ்சா மற்றும் குட்கா, போதை பாக்கு, பான்பராக், பான் மசாலா,' போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் விற்பனை செய்வதற்கு தடை விதித்துள்ளது.
இதை தொடர்ந்து, 'போதை பொருட்கள் ஒழிப்புக்கான சோதனைகளை தீவிர படுத்த வேண்டும்; அண்டை மாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதை தடுக்க கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும்.
'இளைஞர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகாமல் தடுக்க, பள்ளி கல்லுாரி போன்ற கல்வி நிறுவனங்கள் அருகே தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்; பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட வேண்டும்,' என, மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது
தடையை மீறி விற்பனை
எனினும், தடையை மீறி கடைகளில் போதை வஸ்துக்கள் புழக்கத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. இவற்றை தடுக்க போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இணைந்து திடீர் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஊட்டி படகு இல்ல பகுதியில் உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் மேற்கொண்ட திடீர் சோதனையில், அப்பகுதியில் உள்ள வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த சாயம் கலந்த பஞ்சுமிட்டாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல நாள்தோறும் சுற்றுலா மையங்களில், பஞ்சு மிட்டாய் விற்பனை குறித்து கண்காணிக்கப்படுகிறது. பறிமுதல் செய்யப்படுகிறது.
உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் கூறியதாவது:
நீலகிரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பயன்பாட்டைதடுக்கும் விதமாக போலீசார் உடன் இணைந்து, மாவட்டம் முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வியாபாரிகள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் முதல் முறை குற்றத்திற்கு,15 நாட்கள் சீல் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
இரண்டாவது முறை விற்பனை செய்தால், 30 நாட்கள் சீல் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராத விதிக்கப்படும்; மூன்றாம் முறைஅதை குற்றத்தை செய்தால், 90 நாட்கள் சீல் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
கடந்த இரண்டு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 50 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டு, 5 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு துறையால் அங்கீகரிக்கப்படாத நிறங்களில் உள்ள பஞ்சுமிட்டாய் உண்ணும் போது குரல் புற்றுநோய் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனை அதனை விற்பனை செய்ய கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.