/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையோரத்தில் உணவுகளை வீசினால் நடவடிக்கை; வனத்துறை எச்சரிக்கை
/
சாலையோரத்தில் உணவுகளை வீசினால் நடவடிக்கை; வனத்துறை எச்சரிக்கை
சாலையோரத்தில் உணவுகளை வீசினால் நடவடிக்கை; வனத்துறை எச்சரிக்கை
சாலையோரத்தில் உணவுகளை வீசினால் நடவடிக்கை; வனத்துறை எச்சரிக்கை
ADDED : பிப் 25, 2024 10:27 PM

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம்-- கோத்தகிரி சாலையில், சாலையோரத்தில் முட்செடிகளை வேலி போல் அமைத்து, சாலையோரத்தில் உணவுகளை வீசாமல் இருக்க மேட்டுப்பாளையம் வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி, கோத்தகிரிக்கு செல்ல தனி, தனியாக சாலைகள் உள்ளன. சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் வனக்கல்லூரிக்கு அருகில் உள்ள சாலையோரங்களில் உள்ள இடங்களில் உணவு சாப்பிடுகின்றனர்.
சாப்பிட்டு விட்டு மீதமாகும் உணவுகள், பிளாஸ்டிக் தட்டுகள் போன்றவற்றை துாக்கி வீசுகின்றனர். இந்த உணவுகளை சாப்பிட குரங்கள் அதிக அளவில் வருகிறது. மேலும் வனப்பகுதிக்குள் பிளாஸ்டிக் கழிவுகள் செல்வதால், வனவிலங்குகளுக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதை தடுக்க வனத்துறையினர் தீவிர ரோந்து மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வாகனங்களை நிறுத்த வசதியாக உள்ள சாலையோரங்களில் முட்செடிகளை வேலி போல் அமைத்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ''உணவுகளை சாலையோரம் வீசி செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றனர்.---

