/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டேரியில் விதிமீறிய கடைகள்; கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்
/
காட்டேரியில் விதிமீறிய கடைகள்; கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்
காட்டேரியில் விதிமீறிய கடைகள்; கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்
காட்டேரியில் விதிமீறிய கடைகள்; கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்
ADDED : ஜூலை 08, 2025 08:41 PM

குன்னுார்; குன்னுார் காட்டேரி பகுதியில் விதிகள் மீறி கடை அமைக்கப்பட்டுள்ளதுடன், நிலச்சரிவு இடத்தில் கட்டுமான பணிகளும் நடந்து வருகிறது.
குன்னுார்- மேட்டுப்பாளையம் மலைபாதையில், காட்டேரி முதல் நந்தகோபால் பாலம் வரையிலான பகுதியில், பல இடங்களிலும் தற்போது ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது.
அதில், டபுள் ரோடு, காட்டேரி, காந்திபுரம் பகுதிகளில் சமீப காலமாக ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் இரவோடு இரவாக, காட்டேரி வனத்துறை சோதனை சாவடி அருகில் ஆளும் கட்சியினரால், கடை வைக்கப்பட்டுள்ளது. டபுள் ரோடு பகுதியிலும் ஆக்கிரமிப்பு கடைகள் அமைக்கப்படுகிறது. இதனை தேசிய நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இதே போல, காந்திபுரம் அருகே கடந்த, 2009ம் ஆண்டு நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில், மீண்டும் கட்டுமானம் அதிகரித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளது.
இங்கு, கடந்த, 6 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி கமிஷனராக இருந்த சரஸ்வதி, விதிமீறி கட்டிய இந்த கட்டுமானத்திற்கு 'சீல்' வைத்தார்.
ஆனால், சில மாதங்களில் இந்த சீல் அகற்றப்பட்டு, கடைகள் திறக்கப்பட்டன. தற்போது இதன் அருகிலேயே மீண்டும் கடைகள் அமைக்க, மண் அகற்றப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு அபாயம் அறிவித்த இடங்களில், நடக்கும் பணிகள் நகராட்சி அதிகாரிகளின் உடந்தையுடன் நடந்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.
எனவே, இப்பகுதியில் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.