/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொழிலாளர் நல நிதியை உடனடியாக செலுத்தணும்: உதவி கமிஷனர் எச்சரிக்கை
/
தொழிலாளர் நல நிதியை உடனடியாக செலுத்தணும்: உதவி கமிஷனர் எச்சரிக்கை
தொழிலாளர் நல நிதியை உடனடியாக செலுத்தணும்: உதவி கமிஷனர் எச்சரிக்கை
தொழிலாளர் நல நிதியை உடனடியாக செலுத்தணும்: உதவி கமிஷனர் எச்சரிக்கை
ADDED : பிப் 22, 2024 11:36 PM
ஊட்டி:தொழிலாளர் நல நிதியை செலுத்தாத தோட்ட நிறுவனங்கள் உடனடியாக செலுத்த வேண்டும். என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
-தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை உதவி கமிஷனர் லெனின் அறிக்கை;
தோட்ட நிறுவனங்களில் பணிபுரியும், ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் நலநிதியாக, தொழிலாளியின் பங்கு 20, வேலை அளிப்பவரின் பங்கு, 40 சேர்த்து, மொத்தம், 60 சதவீதம் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு ஆண்டுதோறும் செலுத்த வேண்டும்.
நல வாரியத்தில் பதிவு பெற்ற அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் மாத ஊதியம், 25 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு, நல வாரியத்தின் மூலம், பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது.
ஒரு ஆண்டில், 30 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த அனைத்து வகை தொழிலாளர்களுக்கும், தொழிலாளர் நல நிதி செலுத்த வேண்டியது வேலை அளிப்பவரின் கடமை.
கடந்த, 2023ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதியை, 2024, ஜன., 31ம் தேதிக்குள், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு செலுத்தாத தோட்ட நிறுவனங்கள் உடனடியாக செலுத்த வேண்டும்.
தவறும் பட்சத்தில், தோட்ட நிறுவன வேலை அளிப்பவர் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.