/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேயிலை தோட்டங்களில் 'கொப்புள நோய்' தாக்கம்
/
தேயிலை தோட்டங்களில் 'கொப்புள நோய்' தாக்கம்
ADDED : நவ 19, 2025 04:17 AM

கோத்தகிரி: கோத்தகிரியில் தேயிலை தோட்டங்களில், 'கொப்புள' நோய் தாக்கி வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில், நீர் ஆதாரமுள்ள விளை நிலங்களில் கணிசமான பரப்பளவில் மலை காய்கறி சாகுபடி செய்தாலும், 65 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள், தேயிலை விவசாயத்தை நம்பி உள்ளனர். தற்போது, ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு, 18 முதல் 21 ரூபாய் வரை, விலை கிடைத்து வருகின்றது.
இடுப்பொருட்களின் வெளியேற்றம், கூலி உயர்வு, தோட்ட பராமரிப்பு செலவு போன்ற செலவினங்கள் அதிகமாக உள்ளதால், இந்த விலை விவசாயிகளுக்கு கட்டுப்படியானதாக இல்லை.
எனினும், கடந்த காலங்களை காட்டிலும், தற்போது கிடைத்து வரும் விலையால், விவசாயிகள் ஓரளவு ஆறுதல் அடைந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக மழை பொய்த்து, வானம் தொடர்ந்து மேகமூட்டமாக காணப்படுகிறது.
இதனால், தோட்டங்களில் கொப்புள நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில், நோய் தாக்கப்பட்ட இலைகள் சுருண்டு மகசூல் வெகுவாகக் கூடிய வாய்ப்புள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

