ADDED : செப் 29, 2026 06:43 PM
அ நிறம் | அளவு
குன்னுார்: குன்னுார் ஓட்டுப்பட்டறை சாலையில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் முன்புறம் குப்பை மூட்டைகளை நகராட்சி வைக்கிறது.
இதனை பயன்படுத்தி அப்பகுதியை சேர்ந்த சிலரும் கோவில் வளாக பகுதியில் திறந்த வெளியில் குப்பைகளை வீசி செல்கின்றனர். இதனால் கோவில் வாசலில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன், பக்தர்களும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நகராட்சி கண்டு கொள்ளவில்லை. எனவே, வழிபாட்டு தலங்களின் முன்பு குப்பை மூட்டைகளை வைப்பதை தவிர்க்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
