/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வடகிழக்கு பருவமழை பாதிப்பு; நெடுஞ்சாலை துறை தயார்
/
வடகிழக்கு பருவமழை பாதிப்பு; நெடுஞ்சாலை துறை தயார்
ADDED : அக் 08, 2024 11:15 PM
கூடலுார் : கூடலுார் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், மாநில நெடுஞ்சாலை துறையினர்,மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழையின் போது ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள, மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அதில், கூடலுார் பகுதியில் வடகிழக்கு பருவமழையின் போது சாலைகளில் ஏற்படும் பாதிப்புகளை எதிர் கொள்ள நெடுஞ்சாலை துறையினர் முன்னெச்சரிக்கையாக, 1,500க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை, நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் தயார் நிலையில் வைத்துள்ளனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'வடகிழக்கு பருவமழையின் போது, சாலையில் மண் சரிவு ஏற்பட்டால் அதனை அகற்றி போக்குவரத்து சீரமைக்க பொக்லைன் இயந்திரமும், பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் அவசர தேவைக்கு பயன்படுத்தும் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது,' என்றனர்.