/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வாரத்துக்கு ஐந்து நாள் வேலை முறையை அமல்படுத்தணும்
/
வாரத்துக்கு ஐந்து நாள் வேலை முறையை அமல்படுத்தணும்
வாரத்துக்கு ஐந்து நாள் வேலை முறையை அமல்படுத்தணும்
வாரத்துக்கு ஐந்து நாள் வேலை முறையை அமல்படுத்தணும்
ADDED : ஜன 29, 2026 05:44 AM

ஊட்டி: வாரத்திற்கு, 5 நாள் வேலை முறையை அமல்படுத்த வலியுறுத்தி, நீலகிரி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள், ஊட்டியில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வங்கிகளில், 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகள் விடுமுறையாக உள்ள நிலையில், அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வங்கி ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனை நடைமுறைப்படுத்தக் கோரி, நீலகிரி மாவட்டத்திலும் நேற்று முன்தினம் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இதனால், தேசிய மயமாக்கப்பட்ட சுமார், 70 வங்கிகள் மூடப்பட்டிருந்தன.
ஊட்டியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்திற்கு நீலகிரி மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்க பொது செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார்.
ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க செயலாளர் சேகர், கனரா வங்கி அதிகாரிகள் சங்க செயலாளர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஐந்து நாள் வேலைகள் முடிவை உடனடியாக அமல்படுத்த கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. வங்கிகள் திறக்கப்படாத நிலையில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
மாவட்டத்தில் மட்டும், 200 கோடி ரூபாய் மதிப்பில் பணம் மற்றும் காசோலை பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டது.

