/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலை மாவட்டத்தில் காய்கறி விதைகளின் ஈரப்பதம் விளைச்சலுக்கு முக்கியம்! : விவசாயிகளை நஷ்டத்தில் இருந்து காக்க விழிப்புணர்வு

UPDATED : ஜன 20, 2026 06:55 AM
ADDED : ஜன 20, 2026 06:37 AM

ஊட்டி: 'நீலகிரியில் பயிரிடும் விதைகளின் ஈரப்பதம் 6 முதல் 9 சத வீதத்துக்குள் இருக்க வேண்டும்,' என, அதிகாரிகள் அறி வுறுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் மலை காய்கறிகள் விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விதைகள் நல்ல முளைப்பு திறனுடன் இருந்தால் மட்டுமே நல்ல மகசூல் பெற முடியும் என்பதால், விதை பரிசோதனை அவசியம் மேற்கொள்ள வேண்டும். விதைகள் அதன் விதைப்பு பருவம் வரும் வரை விதை வினியோகஸ்தர்கள் மற்றும் விவசாயிகளால் சேமித்து வைக்கப்படுகின்றன. சேமித்து வைக்கப்படும் விதைகளில் ஈரப்பதம் குறிப்பிட்ட அளவிற்கு அதிகமாக இருந்தால் நோய் வர வாய்ப்புள்ளது.
உதாரணமாக, 'கேரட் விதைக்கு 8, பீட்ரூட் 9, முட்டைகோஸ் மற்றும் காலிபிளவர், 7, முள்ளங்கி, 6, பீன்ஸ் மற்றும் பட்டாணி விதைக்கு, 9 சதவீதம் என்ற அளவுக்கு மேல் ஈரப்பதம் இருந்தால் எளிதில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு உட்படுவதோடு விதைகளின் முளைப்பு திறனும் பாதிக்கப்படுவதால் மகசூல் பாதிக்கப்பட்டு விவசாயத்தில் நஷ்டம் ஏற்படும் அபாயம் உள்ளது.
பராமரிப்பு அவசியம் விதை வினியோகம் செய்பவர்கள் மற்றும் விவசாயிகள் தங்களது விதைகளின் புறத்துாய்மை , ஈரப்பதம் மற்றும் முளைப்பு திறன் ஆகியவற்றை பரிசோதனை செய்து விவரங்கள் பெற, ஊட்டி ரோஜா பூங்காவில் உள்ள தோட்டக்கலை இணை இயக்குனர் வளாகத்தில் உள்ள விதை பரிசோதனை நிலையத்தை அணுக வேண்டும்.
விதை அலுவலர் நவீன் கூறியதாவது, ''விதைகளை சேமிக்க புதிய கோணிப்பைகள் அல்லது சுத்தமான தீவன சாக்குகளை பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு பகுதிகளிலும் அமைக்கப்பட்ட விதை சேமிக்கும் கிடங்குகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். குப்பை, துாசிகள், பூச்சி தாக்கப்பட்ட விதைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். ஈரப்பதத்தை அந்தந்த விதைகளின் தன்மைக்கு தகுந்தாற் போன்று குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் பயிரிடும் விதைகளுக்கு, 6 முதல் 9 சதவீதத்திற்குள் ஈரப்பதம் இருக்குமாறு நன்கு காய வைத்து சேமிக்க வேண்டும். மழை மற்றும் பனிகாலங்களில் மிகவும் கவனமாக இப்பணிகளை பின்பற்ற வேண்டும். ஏதாவது சந்தேகம் இருந்தால், தோட்டக்கலை துறை விதை அலுவலரை அணுகலாம்,'' என்றார்