தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சரிவர மூடப்படாத குழி: நடந்து சென்று வர சிரமம்

 சரிவர மூடப்படாத குழி: நடந்து சென்று வர சிரமம்

 சரிவர மூடப்படாத குழி: நடந்து சென்று வர சிரமம்


ADDED : மார் 19, 2026 05:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 05:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோத்தகிரி: கோத்தகிரி பஸ் நிலையம் - மார்க்கெட் இடையே உள்ள நடைபாதை குழி சரிவர மூடப்படாமல் உள்ளதால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சென்று வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கோத்தகிரி நகராட்சி நிர்வாகம் சார்பில், கேபிள் மற்றும் தண்ணீர் குழாய் பதிக்க, சாலையோரத்தில் மாணவர்கள் நடந்து சென்று வரும் 'கான்கிரீட்' நடைப்பாதையில் குழி வெட்டப்பட்டது. பணிகள் நிறைவடைந்து பல நாட்கள் கடந்தும், குழி சரிவர மூடப்படாமல் உள்ளது.

கற்கள் பெயர்ந்து நிலையில், வாகனங்கள் நிறுத்தாதவாறு போலீசார், 'பேரிகார்டு' அமைத்து, தடை ஏற்படுத்தியுள்ளதால், சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. இப்பகுதியில், மூன்று பள்ளிகள் அமைந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் நடப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

எனவே, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, நடைபாதை குழியை கான்ரீட் போட்டு சீரமைப்பது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us