/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அறிவியல் ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி
/
அறிவியல் ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி
ADDED : ஜன 08, 2024 11:56 PM

ஊட்டி;ஊட்டி எமரால்டு ஹைட்ஸ் கல்லுாரியில் மாவட்ட அளவிலான அறிவியல் ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி முகாம் நடந்தது.
ஊட்டி எமரால்டு ஹைட்ஸ் கல்லுாரி வளாகத்தில், சென்னை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில், அறிவியல் ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.
பயிற்சி முகாமின் ஒருங்கிணைப்பாளர் சொர்ணலதா கூறுகையில், ''மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர்களுக்கான பிரத்யேக பயிற்சி இது. இந்த பயிற்சி, 8ம் தேதி முதல் வரை 12 ம் தேதி வரை நடக்கிறது. இப்பயிற்சியில் ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் பகுதி அரசு பள்ளிகளை சேர்ந்த, 50 பேர் பங்கேற்றனர்.
இந்த பயிற்சி கருத்தரங்கம், ஆய்வக பயிற்சிகளையும் உள்ளடக்கியது. கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் ஆகிய துறைகளை சேர்ந்த பேராசிரியர்கள் இப்பயிற்சியினை வழங்குகின்றனர். இதன் மூலம் அறிவியல் துறையில் தற்போதுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆசிரியர்கள் அறிந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர்,'' என்றார்.