/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விழும் நிலையில் மின்கம்பம் உடனடி நடவடிக்கை அவசியம்
/
விழும் நிலையில் மின்கம்பம் உடனடி நடவடிக்கை அவசியம்
விழும் நிலையில் மின்கம்பம் உடனடி நடவடிக்கை அவசியம்
விழும் நிலையில் மின்கம்பம் உடனடி நடவடிக்கை அவசியம்
ADDED : ஜன 18, 2024 10:10 PM

ஊட்டி : ஊட்டி என்.டி.சி., பகுதியில் அடிபாகம் வலுவிழந்து சாய்ந்த நிலையில், காணப்படும் மின்கம்பம் விழும் நிலையில் உள்ளது.
ஊட்டி ஏ.டி.சி.,யிலிருந்து, பஸ் ஸ்டாண்ட் சாலையில் என்.டி.சி., பஸ் ஸ்டாப் வழியாக தினமும் ஏராளமான அரசு பஸ், தனியார் வாகனங்கள் சென்று வருகின்றன. பொதுமக்களின் நடமாட்டமும் அதிகளவில் உள்ளது.
என்.டி.சி., பஸ் ஸ்டாப் ஆட்டோ ஸ்டாண்டை ஒட்டிய இடத்தில் கான்கிரீட் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தின் அடி பகுதி வலுவிழந்து சாய்ந்த நிலையில், எந்நேரத்திலும் விழும் நிலையில் உள்ளது.
இங்கு பஸ் ஸ்டாப், ஆட்டோ ஸ்டாண்ட், தனியார் மருத்துவமனை மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளதால், மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தி வலுவிழந்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.