/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நெடுஞ்சாலைத்துறையில் ரூ. 40 கோடியில் சாலை பணி : 40 சதவீதம் நிறைவு
/
நெடுஞ்சாலைத்துறையில் ரூ. 40 கோடியில் சாலை பணி : 40 சதவீதம் நிறைவு
நெடுஞ்சாலைத்துறையில் ரூ. 40 கோடியில் சாலை பணி : 40 சதவீதம் நிறைவு
நெடுஞ்சாலைத்துறையில் ரூ. 40 கோடியில் சாலை பணி : 40 சதவீதம் நிறைவு
ADDED : ஜன 15, 2024 10:43 PM

ஊட்டி:ஊட்டி நெடுஞ்சாலை கோட்டத்தில், 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது .
ஊட்டி நெடுஞ்சாலை கோட்டத்திற்கு உட்பட்ட ஊட்டியில் இருந்து, எம்.பாலாடா, இத்தலார், எடக்காடு மற்றும் காந்தி பேட்டை, தாம்பட்டி சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் சாலை விரிவாக்கம், சிறு பாலம், கல்வெட்டு அமைத்தல் , சாலையோர தடுப்பு சுவர் கட்டுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தனர்.
குறிப்பாக, சில பகுதிகள் உள்ள சாலைகள் கடந்த கால கனமழையின் போது விரிசல் ஏற்பட்டு சேதமானது. இப்பணிகளை மேற்கொள்ள நெடுஞ்சாலை துறை மூலம் பல்வேறு திட்டங்களின் கீழ், 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. மேற்கண்ட பணிகளுக்காக டெண்டர் விடப்பட்டு சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டு நடந்து வருகிறது.
நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஊட்டி நெடுஞ்சாலை கோட்டத்திற்கு உட்பட்ட 15க்கு மேற்பட்ட பகுதிகளில், 40 கோடி ரூபாயில் சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. அதில், 40 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,' என்றார்.