/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இரு வாரத்தில் யானை தாக்கியதில் மூவர் பலி: வயநாட்டில் கடையடைப்பு போராட்டம்
/
இரு வாரத்தில் யானை தாக்கியதில் மூவர் பலி: வயநாட்டில் கடையடைப்பு போராட்டம்
இரு வாரத்தில் யானை தாக்கியதில் மூவர் பலி: வயநாட்டில் கடையடைப்பு போராட்டம்
இரு வாரத்தில் யானை தாக்கியதில் மூவர் பலி: வயநாட்டில் கடையடைப்பு போராட்டம்
ADDED : பிப் 18, 2024 02:19 AM

பந்தலுார்:கேரள மாநிலம் வயநாட்டில் இரு வாரங்களில் யானை தாக்கி மூவர் பலியானதால், பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, கடையடைப்பு போராட்டம் நடந்தது.
நீலகிரி மாவட்டம், பந்தலுாரை ஒட்டி கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த மாதம், 31ம் தேதி லட்சுமணன்; கடந்த, 10ம் தேதி அஜீஸ்; யானை தாக்கி உயிரிழந்த நிலையில், 16- ம் தேதி, பால்,42, என்பவர் யானை தாக்கியதில் உயிரிழந்தார்.
தொடர்ந்து, உயிரிழந்த பால் உடலுடன் புல்பள்ளி கடைவீதியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், நேற்று முன்தினம் அதே பகுதியில், புலி தாக்கி கொன்ற பசுவின் உடலை எடுத்து வந்த போராட்ட குழுவினர், அந்த வழியாக வந்த வனத்துறை ஜீப் மீது, பசு உடலை போட்டு, தாக்குதல் நடத்தியதுடன், டயர்களின் காற்றை பிடுங்கி விட்டனர். வனத்துறையினரை சிறை பிடித்தனர்.
அப்போது, பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
பொதுமக்கள் போலீசார் மீது சேர்களை வீசி உள்ளனர். சிறிது நேரத்தில் போலீசார் தடியடியை நிறுத்தினர்.
மாவட்ட கலெக்டர் கீதா தலைமையிலான அதிகாரிகள், மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், 'இறந்தவர் குடும்பத்துக்கு, 10 லட்சம் ரூபாய் நிவாரணம்; யானை தாக்கி இறந்தவர் மனைவிக்கு அரசு வேலை; குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும்,' என, தெரிவித்த பின்னர், உடல் வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு, இறுதி சடங்கு நடந்தது.
வயநாட்டில் நடந்த போராட்டம்; கடையடைப்பு காரணமாக, தமிழக-- கேரளா அரசு பஸ்கள் மற்றும் வாகனங்கள் ஏதும் வயநாடு பகுதிக்கு இயக்கப்படவில்லை.
சரக்கு லாரிகள் மாநில எல்லை பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன.