/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு நடுநிலை பள்ளியில் கலை திருவிழா துவக்கம்
/
அரசு நடுநிலை பள்ளியில் கலை திருவிழா துவக்கம்
ADDED : அக் 22, 2024 11:50 PM
கோத்தகிரி : கோத்தகிரி ஒரசோலை அரசு நடுநிலைப் பள்ளியில் கலைத் திருவிழா துவங்கியது.
மாநில அரசின் பள்ளி கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில், 2024-25ம் ஆண்டின் கலைத் திருவிழா, கோத்தகிரி வட்டார வள மையத்திற்கு உட்பட்ட, ஒரசோலை அரசு நடுநிலைப் பள்ளியில் துவங்கியது.
நிகழ்ச்சிக்கு, கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராயர் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன், பட்டதாரி ஆசிரியர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நடுவர்களாக, ஜெனிஷ், லலிதா மற்றும் ரோஸ்லின் ஆகியோர் செயல்பட்டனர். ஆசிரியர்கள் தினகரன், சிவக்குமார் மற்றும் ஹேரி ஆகியோர் ஒருங்கிணைப்பில், ஒரசோலை, கட்டபெட்டு அரசு பள்ளிகள், அரவேனு உண்டு உறைவிடப் பள்ளி, நல்லாயன் மற்றும் சி.எஸ்ஐ., பள்ளிகளில் இருந்து, மாணவர்கள் பங்கேற்றனர்.

