/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முழுமை பெறாத நடைபாதை பணி: சிரமப்படும் மக்கள்
/
முழுமை பெறாத நடைபாதை பணி: சிரமப்படும் மக்கள்
ADDED : டிச 01, 2024 10:48 PM

குன்னுார்;' குன்னுார் கரோலினா புது காலனி பகுதியில், நடைபாதை பணி முழுமையாக பெறாததால் மக்கள் நாள்தோறும் சிரமப்படுகின்றனர்.
குன்னுார் உபதலை ஊராட்சிக்கு உட்பட்ட கரோலினா, புது காலனி கிராமங்களில் ஏராளமான குடும்பங்கள் உள்ளன. இங்கு, 1.50 லட்சம் ரூபாய் மதிப்பில் நடைபாதை அமைக்கும் பணி கடந்த, 3 மாதங்களுக்கு முன்பு நடந்தது. அதில், ஒரு குறிப்பிட்ட துாரம் வரை சீரமைக்கப்பட்டு, பணிகள் நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து, நடைபாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ள இடங்களை முழுவதுமாக புறக்கணித்து, எதிர்புறம் மட்டும் நடைபாதை அமைக்க மீண்டும் கற்கள் கொட்டப்பட்டது. இதனால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மக்கள் கூறுகையில், ''புது காலனிக்கு செல்லும் குறிப்பிட்ட வீடுகள் உள்ள பகுதி முழுவதும் சீரமைக்காமல் இரு இடங்களில் மட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதர்கள் சூழ்ந்த இந்த பகுதியில் காட்டெருமை, கரடி உள்ளிட்டவை அடிக்கடி நடமாடுவதால் அச்சத்துடன் சென்று வர வேண்டி உள்ளது. இந்த பகுதியில் நடைபாதை அமைக்கப்படாததால், வயதானவர்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து நிதி ஒதுக்கீடு செய்து, நடைபாதை பணிகளை முழுமை படுத்தி தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.