/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முக்கிய நடைபாதைகளில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பால் மக்களுக்கு சிரமம்
/
முக்கிய நடைபாதைகளில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பால் மக்களுக்கு சிரமம்
முக்கிய நடைபாதைகளில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பால் மக்களுக்கு சிரமம்
முக்கிய நடைபாதைகளில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பால் மக்களுக்கு சிரமம்
ADDED : டிச 01, 2024 10:47 PM
ஊட்டி; ஊட்டி நகரில் நடைபாதைகளில் பொருட்களை குவித்து வைப்பதால் பொதுமக்கள் நடப்பதில் இடையூறு ஏற்படுகிறது.
ஊட்டி நகரில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும், லோயர் பஜார், கமர்சியல் சாலை, தாவரவியல் பூங்கா சாலை, ஏ.டி.சி., யிலிருந்து பஸ் ஸ்டாண்ட் செல்லும் சாலையோரம் உள்ள கடைகள்காரங்கள், வியாபாரிகள், நடைபாதையை ஆக்கிரமித்து தாறுமாறாக பொருட்களை குவித்து வைத்துள்ளனர்.
இதனால்,பொதுமக்கள் நடைப்பாதையை தவிர்த்து சாலையில் நடக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.போக்குவரத்து நெரிசலுக்கு இடையே நடந்து செல்லும் பொது மக்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
நகராட்சி சார்பில் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டாலும் , ஓரிரு நாட்களிலேயே ஆக்கிரமிப்புகள் மீண்டும் முளைத்து விடுவது வாடிக்கையாகி விட்டது. மக்கள் கூறுகையில், 'ஊட்டி நகரில் உள்ள நடை பாதை ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு உடனடியாக அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என்றனர்.