ADDED : மார் 12, 2024 11:29 PM
அ நிறம் | அளவு
குன்னுார்:குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கடந்த, 2 நாட்களுக்கு முன்பு இரவு, 7:00 மணியளவில் மவுன்ட் பிளசன்ட் பகுதியில் கரடி ஒன்று நடந்து சென்றது அங்குள்ள 'சிசிடிவி' கேமராவில் பதிவானது.
முன்னதாக, 6:45 மணியளவில் மோர்ஸ் கார்டன் அருகே இரு கரடிகள் நடந்து சென்றுள்ளதை அப்பகுதி மக்கள் பார்த்து அச்சமடைந்தனர்.இதே போல, கடந்த, 2 நாட்களாக அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை வளாகத்தில் இருந்த கரடி வெளியேற முடியாமல் உள்ளது. ஆய்வு செய்த வனத்துறையினர் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள முட்புதர்களை அகற்ற உத்தரவிட்டுள்ளனர்.
தொழிலாளர்கள் கூறுகையில், 'கரடிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வனத்துறையினர், கூண்டு வைத்து கரடியை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும்,' என்றனர்.
