/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு அலுவலகம் அருகே புதர் : விலங்கு நடமாட்டம் அதிகரிப்பு
/
அரசு அலுவலகம் அருகே புதர் : விலங்கு நடமாட்டம் அதிகரிப்பு
அரசு அலுவலகம் அருகே புதர் : விலங்கு நடமாட்டம் அதிகரிப்பு
அரசு அலுவலகம் அருகே புதர் : விலங்கு நடமாட்டம் அதிகரிப்பு
ADDED : ஜன 15, 2024 10:40 PM

கோத்தகிரி;கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் - நூலகம் இடையே, ஆக்கிரமித்துள்ள புதர் செடிகள் அகற்றாததால், வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வழியாக, ராம்சந்த் பகுதியில் அமைந்துள்ள நுாற்றுக்கணக்கான வீடுகளுக்கு மக்கள் சென்று வருகின்றனர்.
அரசு அலுவலகம், நுாலகம் மற்றும் காந்தி மைதானத்தை ஒட்டி அமைந்துள்ள வணிக வளாகத்திற்கு நாள்தோறும் மக்கள் அதிகளவில் சென்று வருவதால், இப்பகுதி நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.
இங்குள்ள நடைபாதையை ஒட்டி,ஆக்கிரமித்துள்ள புதர் அகற்றப்படாமல் உள்ளது. இதனால், காட்டு பன்றி, காட்டெருமை, கரடி மற்றும் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் புதரில் பதுங்கி அவ்வப்போது வெளியே வருகின்றன. இதனால், மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. அசம்பாவிதம் நடப்பதற்கு முன் மக்கள் நலன்கருதி, புதர் செடிகளை அகற்றுவது அவசியம்.