/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நோய் தாக்குதல் அதிகரிப்பு பாகற்காய் செடிகள் பாதிப்பு
/
நோய் தாக்குதல் அதிகரிப்பு பாகற்காய் செடிகள் பாதிப்பு
நோய் தாக்குதல் அதிகரிப்பு பாகற்காய் செடிகள் பாதிப்பு
நோய் தாக்குதல் அதிகரிப்பு பாகற்காய் செடிகள் பாதிப்பு
ADDED : ஏப் 08, 2025 10:04 PM

கூடலுார்; கூடலுார் பகுதியில், நோய் தாக்குதல் அதிகரித்து, மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதால் பாகற்காய் விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர்.
கூடலுார் பகுதி விவசாயிகள் வயல் நிலங்களில், பருவமழை காலத்தில் நெல்லும், கோடையில் காய்கறிகளும் பயிரிட்டு வருகின்றனர். கோடையில் மற்ற காய்கறிகளை விட பாகற்காய் அதிக அளவில் பயிரிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். நடப்பு ஆண்டு நோய் தாக்குதல் அதிகரிப்பதால் மகசூல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், வருவாய் இழப்பு ஏற்பட்டு, நஷ்டத்தை ஈடு செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில், நோய் பாதிக்கப்பட்ட பாகற்காய் செடிகளை, உதவி தோட்டக்கலை அலுவலர் ஜெயலட்சுமி, விதை சான்றிதழ் அலுவலர் ரமேஷ், விஞ்ஞானி சண்முகம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
கூடலுார் தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெயலட்சுமி கூறுகையில், ''பாகற்காய் செடிகளில் ஆய்வு செய்ததில், வைரஸ் தாக்குதல் குறைவாகவே இருந்தது. ஆனால், பழ ஈக்கள் பாதிப்பு அதிகமாக காணப்பட்டது. இதனை தடுக்க முதுகுழி பகுதி விவசாயிகளுக்கு விளக்கு பொறி, மஞ்சள் பொறி இலவசமாக வழங்கப்பட்டு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
விவசாயிகள் பல ஆண்டுகளாக இதே வகை பாகற்காய் விதைகளை சாகுபடி செய்வதால் மண்ணின் வளம் மாற்றம் ஏற்பட்டு, வைரஸ் தாக்குதல் அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில் இதனை தடுக்க, ஆண்டுக்கு ஒரு முறையாவது மாற்றுப் பயிர் சாகுபடி செய்ய வேண்டும். சாகுபடிக்கு முன், பயிர் வளர்ச்சியின் போதும் நுண்ணுாட்ட சத்துக்கள் பயன்படுத்த வேண்டும்,'' என்றார்.